அத்துமீறி நுழைந்த மீனவர்கள் கைது

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்