60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவிலிருந்து கத்தார் வழியாக இந்த நபர் கட்டுநாயக்க வந்தார்.
அவரது பொதிகளை சோதனையிட்ட போது போதைப்பொருள் சிக்கியது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




