நகைகளை புலிகள் பறித்தார்களா… மக்கள் ஒப்படைத்தார்களா என்பதை அறிய விசாரணை நடக்குமாம்!

Date:

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் வசமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு, தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ள 10,000 தங்க நகைகளை எடைபோட்டு, அவற்றில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்து தனது நீதிமன்றத்திற்கும் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (05) தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைக்கு உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுவைப் பிறப்பித்தார்.

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை எடைபோட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தாமாக முன்வந்து தங்க நகைகளை விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தார்களா அல்லது புலிகள் அந்த மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அவற்றைப் பறித்தார்களா என்பதைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்று துணை சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்