ட்ராக்டர் பாதையில் இருந்ததாம்; பிரான்ஸ் எல்லைக்கல்லை தள்ளி வைத்த பெல்ஜியம் விவசாயி: எல்லைப் பிரச்சனை பூதாகரமானது!

Date:

பெல்ஜியத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரான்ஸ் எல்லையை சுமார் ஏழரை அடி நகர்த்தியது சர்வதேச அளவில் பூதாகரமாகியுள்ளது.

எல்லை கிராமமான எர்குவெலின்ஸில் உள்ள விவசாயி தனது டிராக்டர் பயணிப்பதற்கு தடையாக இருப்பதாக, எல்லை கல்லை நகர்த்தி வைத்து விட்டார்.

அவர் அறியாமல் செய்த விவகாரம் இப்பொழுது விஸ்பரூபம் எடுத்துள்ளது.

பிரெஞ்சு-பெல்ஜிய எல்லை 1820 கோர்ட்ரிஜ்க் ஒப்பந்தத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டது. 1819 ஆம் ஆண்டில் எல்லை முதன்முதலில் அமைக்கப்பட்டபோது கல் முதலில் அங்கு வைக்கப்பட்டது.

எல்லை கிராமமான எர்குவெலின்ஸில் உள்ள விவசாயி தனது டிராக்டர் பயணிப்பதற்கு தடையாக இருப்பதாக, எல்லை கல்லை 7.5 அடிக்கு நகர்த்தியதால் பிரான்ஸ் 1000 சதுர அடி நிலத்தை இழந்தது.

அந்த கல்லை மீண்டும் பழைய இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எர்கெலின்ஸ் நகரின் மேயரான டேவிட் லாவாக்ஸ் தெரிவித்தார்.

விவசாயி கல்லைத் திருப்பி சரியான இடத்தில் வைக்கும்படி கேட்கப்படுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த விவகாரத்தை பெல்ஜிய வெளிவிவகார அமைச்சே முடித்து வைக்க வேண்டும்.

அத்துடன், 1930 முதல் செயலற்று காணப்படும் பிரான்ஸ் -பெல்ஜிய எல்லை ஆணைக்குழு மீண்டும் கூடி, எல்லைக்கல் சரியான இடத்தில் வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்