வரலாற்றில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
1.13 பில்லியன் டாலர் ஏமாற்றமடைந்த பைபிட் நிறுவனம், வரலாற்றில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டுச் சம்பவத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று முன்தினம் (21.02.2025) மிகப்பெரிய ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகியுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் தனது ஆஃப்லைன் ஹாட் வாலட் ஒன்றிலிருந்து Ethereum (ETH) டோக்கன்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையின் படி, 401,346 ETH (சுமார் 1.13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய) டோக்கன்கள், பைபிட் நிறுவத்தின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத ஒரு வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளன. பரிமாற்றத்திற்கு பின், அந்த திருடப்பட்ட நிதி பல்வேறு வாலட்களுக்கு பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென் சோவ், பைபிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது, இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது, கிரிப்டோகரன்சி உலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக திகழ்கின்றது.




