பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள பாப்பரசர் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, அவர் வத்திக்கான் தேவாலயத்தில் பங்கேற்க இருந்த முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதால், பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று வத்திக்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வத்திக்கான் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர்.




