ட்ரம்ப், எலான் மஸ்க் மரண தண்டனைக்கு தகுதியா? – XAI கோர்க் சேட்பாட் பதிலால் அதிர்ச்சி!

Date:

எக்ஸ் (X) தளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பொறி XAI கோர்க் (Grok) சேட்பாட், அதிர்ச்சி அளிக்கும் பதில்களை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு பயனர், “அமெரிக்காவில் தற்போது உயிருடன் இருப்பவர்களில் யார் மரண தண்டனைக்கு தகுதியானவர்?” எனக் கேட்டபோது, முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பதிலை வழங்கியது. பயனர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என குறிப்பிட்டதும், XAI கோர்க் “டொனால்ட் ட்ரம்ப்” என பதிலளித்தது. அதே கேள்வியை மீண்டும் எழுப்பிய போது, “எலான் மஸ்க்” என பதில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில்கள் வைரலாக, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, XAI அமைப்பு உடனடியாக கோர்க் சேட்பாட்டில் திருத்தங்களை செய்துள்ளது. அதன் காரணமாக, தற்போது அதே கேள்விக்கு “ஒரு AI ஆக, இந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை” என தவிர்க்கும் பதிலை வழங்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம், செயற்கை நுண்ணறிவின் முறைசாரா பதில்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. AI-யின் சரியான கட்டுப்பாடு குறித்து புதிய விவாதங்களுக்கு இது வழிவகுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்