பங்களாதேஷில் வன்முறைகள் – இந்தியா கண்டனம்

Date:

பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பங்களாதேஷில் இடம்பெற்ற அரசியல் போராட்டங்களின் போது, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்று சிறப்புமிக்க இல்லம் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இதன் போதே ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் கட்சித் தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், “பங்களாதேஷ் மக்களின் வீரமிக்க எதிர்ப்பின் அடையாளமான வரலாற்று சிறப்பு மிக்க ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் அழிக்கப்பட்டது மிகுந்த வருத்தத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.

மேலும், பங்களாதேஷின் அடையாளத்தையும் பெருமையையும் வளர்த்த சுதந்திரப் போராட்டத்தை மதிப்பவர்கள் அனைவரும், இந்த குடியிருப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்”. என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

விடுதியில் இளம்பெண் கொலை: காதலன் தலைமறைவு

நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண்...

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்