மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

Date:

இபலோகம ரணஜயபுர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதிக வேகத்தால், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இபலோகம ரணஜயபுர பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலகே சானுக தேசான் ஹேரத் என்ற 25 வயதுடையவர் என்பதும், இவர் இராணுவத்தில் லான்ஸ் கோப்ரலாக (Lance Corporal) கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்தில் தீவிரமாக காயமடைந்த இவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இபலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்