மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

Date:

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இல்லாமல், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால், குறித்த பகுதிகளுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து, மின்சாரக் கம்பிகள் அறுந்து மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், பாடசாலை மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

இரவில் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் அட்டகாசங்களால், மக்கள் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் நிலத்தில் மின்சார தாக்கம் ஏற்படுத்தும் அபாயத்தால், பாதைகளில் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்தவிதமான தீர்வும் எடுக்கப்படவில்லை என மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, சரிந்து வீழ்ந்த மின்சார தூண்களை உடனடியாக சரிசெய்து, மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...

ஜோர்டான் இலங்கைத் தூதரகத்தின் அருகில் நடந்த பயங்கரம்

வியாழக்கிழமை அம்மான் நகரில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஜோர்டானியப் பாதுகாப்பு உத்தியோகத்தர்...

தேடும் அறிவித்தலை நிறுத்தி வைத்த பொலிசார்

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்