மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Date:

பாதுகாப்பற்ற நிலையிலமைக்கப்பட்டிருந்த மின்கம்பி ஒன்றிலிருந்து மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) பிற்பகல், செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் 31 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபரின் தாயார் சுகயீனமுற்றிருந்த நிலையில், மதிய உணவு வழங்க வீட்டுக்குச் சென்றவேளை, வீட்டுக்குள் நாய்கள் புகுவதைத் தடுக்கும் நோக்கில் சென்றபோது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்