[embedyt] https://www.youtube.com/watch?v=GpYduTcA-Co[/embedyt]
சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் இன்றைய தினம் (04.02.2025) திருகோணமலையில் பல்வேறு இடங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இச் சிரமதான பணிகளில் ஒவ்வொரு பாடசாலையை சேர்ந்த சாரணர் குழுக்களும் ஒவ்வொரு இடங்களில் சிரமதானங்களை மேற்கொண்டனர்.
இதன் போது சாரணர்கள், திரி சாரணர்கள், சாரண ஆசிரியர்கள், மாவட்ட சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





