இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருகோணமலை தோப்பூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (04) சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எப்.எம். ரமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தோப்பூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தோப்பூர் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





