இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது.
முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் 15,000 டோஸ் நேற்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்தன.
69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆறு மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை வாங்குவதற்கு அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் முதல் தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்தது.




