அரியநேந்திரனுக்கு உயிரச்சுறுத்தலென புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கையாம்: விக்னேஸ்வரன் தகவல்

Date:

தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு உயிரச்சுறுத்தல் அபாயமுள்ளதால், அவர் தனது பாதுகாப்பில் அக்கறையெடுக்க வேண்டுமென குறிப்பிட்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதால் ரணில் விக்கிரமசிங்க தரப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக செய்திகள் வெளிவரும் பின்னணியில் இந்த தகவலும் வெளியானது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஸ்வரனின் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது-

//தமிழ் பொது வேட்பாளர் திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இம்முறை தேர்தலில் திரு.அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிங்களக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இத்துடன் அனுப்பப்படுகிறது. சிங்களக் கடிதத்தின் பிரதியும் இத்துடன் அனுப்பப்படுகிறது.//

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்