வட்டுக்கோட்டையில் வளர்ப்பு நாய்க்கு நடத்தப்பட்ட இறுதிக்கிரியை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பைசா என்று அழைக்கப்படும் ரொட்வைலர் இன நாயானது கடந்த 2006இல் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது 18வயதை தாண்டி நேற்றையதினம் (14) உயிரிழந்தது.
இறுதிச் சடங்கினை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவை வளர்த்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பு வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இறுதிச் சடங்கு நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.
வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடல் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் பைசாவின் எசமானின் காணியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



