பாடசாலை பாடப்புத்தகத்தில் தமன்னாவின் புகைப்படம்-விரக்தியில் பெற்றோர்!

Date:

பெங்களூரு தனியார் பாடசாலையில் 7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் இடம்பெற்றதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பாட புத்தகத்தில், ஹிந்தி மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங், நடிகை தமன்னா ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், தமன்னா பற்றிய பாடம் தொடர்பாக பாடசாலையின் வாட்ஸ் அப் குழுவில் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையான பதில் கிடைக்காததால், பாடசாலையின் அதிபரை சந்தித்து விளக்கம் கேட்டனர்.

அதற்கு பாடசாலை நிர்வாகத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்தபெற்றோர் கர்நாடக பாடசாலைக்கல்வித் துறைக்கு  புகார் அளித்தனர். அதில், “சம்பந்தப்பட்ட பாடம் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இருப்பதால், அதனை நீக்க வேண்டும்” என கோரியுள்ளனர். இந்நிலையில் சில பெற்றோர், தமன்னா பற்றிய பாடத்தை நீக்காவிட்டால் அந்தப் பாடசாலையில் இருந்து தங்களது குழந்தைகளை வேறு பாடசாலைக்கு மாற்றி விடுவதாக எச்சரித்துள்ளனர்.

 

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்