கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார பிரிவு திறப்பு

Date:

கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பலரும் வரவேற்றனர்.

தொடர்ந்து வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் நிதி உதவியில் பெண்களிற்கான சிகிச்சை கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி கொப்பங், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுனர் பி.எச்.எம்.சார்ள்ஸ், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...

கமேனி கொல்லப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?: ஈரான் சபாநாயகர் தகவல்!

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், பெப்ரவரி...

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்