கிளிநொச்சியில் இராணுவத்தின் பூங்காவுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்!

Date:

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் படையினரால் நிர்மாணிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று மாலை 2.30 மணியளவில் சட்டத்தரணி சுகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

டிப்போ சத்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையில் குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் போராட்டத்துக்கான காரணத்தை கேட்டு அமைதிப்படுத்த முனைந்தனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்து, வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டம் செய்ய பொலிசாரால் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிப்போ சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றி சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்