டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்காக போட்டியிட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.
எனினும், உள்ளூராட்சி தேர்தலுக்கு அஞ்சிய அரசு, தேர்தலை பிற்போட்டது.




