யாழில் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி: இந்த மினிபஸ்ஸின் வழித்தட அனுமதி இடைநிறுத்தம்!

Date:

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பஸ் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பஸ்களின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்