25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

நல்லூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட மான்கள்: மயக்க ஊசி செலுத்தியதால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த மூன்று மான்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மூன்று மான்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், இந்த மூன்று மான்களும் அவற்றை வளர்த்த நபருடன் கைது செய்யப்பட்டன.

பின்னர் மான்களை வாகனத்தில் கொண்டு செல்ல வசதியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அவற்றில் ஒரு மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. ஏனைய இரண்டு மான்களும் பின்னர் இறந்தன.

இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.ஈ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment