யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியிலுள்ள பழக்கடை வியாபாரிகள், யாழ். மாநகரசபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து இன்று (06) வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள், மாநகரசபையினரால் தமது குடும்ப வருமானம் முழுமையாக பறிக்கப்படுவதாகவும், இந்த செயற்பாடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போராட்டம் நடத்திய பழக்கடை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த கடைகள் தமக்கு வழங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் 3,000 ரூபா வரியும் தற்போது 7,500 ரூபா வரியையும் செலுத்தி வருகின்ற போதிலும், மேலும், 300 ரூபா வரி உயர்த்தப்பட்ட போதும் அதையும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த கடைகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இவற்றில் குறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர், மேலும் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது என தெரிவித்த வியாபாரிகள், யாழ். மாநகரசபையின் அதிகாரிகள் கடைகளின் அளவை குறைத்து, அதற்கான அடையாளமிடல் நடவடிக்கை முன்னெடுத்த வேளை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நடவடிக்கையை
நிறுத்தியிருந்தனர்.
இப் பகுதியில் கடைகளை நடத்திவரும் வியாபாரிகள், இதுவரை எடுத்துள்ள கடன் மற்றும் முதலீடுகளால் தங்கள் குழந்தைகள் கல்வி கற்றுக்கொண்டிருக்கும், இந்நிலையில், மாநகரசபையின் செயற்பாடு அவர்களின் நிலையை மேலும் கவலைக்கிடமாக்குவதாகவும், குறித்த வியாபார பகுதியை சேர்ந்த வியாபாரத்தை விட நாட்டின் பொருளாதாரத்தை அழித்தல் குறித்து சந்தேகங்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாநகரசபையால் அடையாளமிடப்பட்ட கழிவுநீர் வடிகால்களின் மோசமான நிலை குறித்து, அவற்றை சீர் செய்ய கோரினாலும், மாநகரசபை இதுவரை நடவடிக்கை எடுக்காததையும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“நாங்கள் எம்மால் முடிந்த முதலீடுகளை செய்து, சுய தொழிலில் ஈடுபட்டு வாழ்வதற்கு அத்தகைய சுயாதீன வாழ்க்கையை தடுக்காமல், நம்மிடம் பொருளாதார ஈட்டலை வழங்க வேண்டும்” என vியாபாரிகள் வலியுறுத்தி, “நியாயம் கிடைக்காவிடின் போராட்டத்தை தொடர்வோம்” என தெரிவித்துள்ளனர்.




