மட்டக்களப்பில் அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் அங்கு கடமையாற்றும் ஒரு சில சாரதிகள் அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வருகின்றனர் எனவே இது தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இதற்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.  என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருளான டீசலை தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்று வருகின்றனர் இதற்கான பணத்தை அந்தந்த அரச திணைக்களம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதாரணமாக ஒரு திணைக்களத்தின் அரச வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 50 லீற்றர் டீசலை மட்டும் வாகனத்தில் நிரப்பிவிட்டு அனுமதி எடுத்து கொண்;ட 100 லீற்றரில் மிகுதி 50 லீற்றரை  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் கொடுத்து தற்;போது ஒரு லீற்றர் 382 ரூபாவான டீசலுக்கு அவர்களிடம் இருந்து ஒரு லீற்றருக்கு 300 ரூபா அல்லது 310 வீதம்  பணத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக் கொண்டு பாரிய மோசடி இடம்பெற்று வருகின்றது.

இந்த மோசடி சில சாரதிகள் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன்  சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அரச பணம் மாதம் ஒன்றுக்கு பல இலச்சம் ரூபா மோசடி இடம்பெற்று வருவதால் இதற்கு உடந்தையாக இருக்கும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மக்களின் வரிப்பணம் மோசடி இடம்பெற்று வருகின்றது இந்த நாட்டில் வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துக்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் இலவசமாக நோய்க்கான மருந்தை பெறுவதற்கு பஸ் வண்டிக்கு பணம் செலவழித்து அரச வைத்தியசாலைக்கு சென்றால்  அங்கு சில மருந்துகள் தட்டுப்பாடு காரணம் நிதி தட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

சுகாதாரதுறைக்கு பெரும் தொகை பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தும் இவ்வாறான சில சாரதிகளின் மோசடிகளால் அரசாங்கத்துக்கு   பாரிய  நஷ்டம் எற்படுகின்றது இது மக்களின் வரிப்பணம் வுpணடிக்கப்படகூடாது என்பற்காக இது சம்ம்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கையை முன்வைக்கின்றோம் உங்கள் திணைக்கள வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் போது அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி எரிபொருளை நிரப்பினால் இவ்வாறான மோசடியை தடுக்க முடியும்.

அல்லது மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் நிலையத்தில் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அங்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது அதில் இந்த அரச வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பினால் இந்த மோசடியை தடுப்பதுடன் அரசாங்கத்துக்கு இலாபம் கிடைக்கும். எனவே இது தொடர்பாக துறைசார் அதிகாரிகள் அரசாங்க அதிபர், சுகாதார பணிப்பாளர் கவனம் செலுத்தி இந்த மோசடியை தடுக்க வேண்டும்.

இந்த மோசடி தொடர்பாக பொலிசாரே குற்ற விசாரணைப் பிரிவினரே அழைத்தால் எங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வழங்க தயார் என்பதுடன் எந்தவிதமான பொய் குற்றச்சாட்டுக்களை அரச அதிகாரிகளுக்கோ அல்லது அரச உத்தியோகத்தர் மீதுதே சாரதிகள் மீதே முன்னைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. தகுந்த ஆதராங்களுடன் இந்த மோசடியை வெளியிடுகின்றோம்

எனவே இதில் கவனம் செலுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் இலங்கை தொடர்ந்து கடன் பெறுகின்ற நாடாகத்தான் இருக்கும் என்பதுடன் இலங்கையில் இன்று 3 நேர உணவை உண்பதற்கு மக்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். எரிபொருள் விலை ஏற்றம் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பலவிதமான சுமைகளை தாங்கும் போது வரிக்கு மேல் வரி சுமத்தப்படுகின்றது.

ஆதலால் இவ்வாறு மோசடிகள் தொடர்ந்து இடம்பெற்றால் தொடர்ந்தும் அந்த சுமை மக்களின் தலையில் தான் விழும் என்பதனை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அதேவேளை மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களை சில அரச உத்தியோகத்தர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் போது அதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது அண்மையில் நான் வீதியில் செல்லும் போது ஒரு விளையாட்டு போட்டிக்கு அதிதியாக அரச அதிகாரி ஒருவர் அரச வாகனத்தில் சென்றுள்ள நிலையில் அந்த விழா முடிவடையும் வரை சுமார் 3 மணித்தியாலம் அந்த வாகனம் இயங்கி கொண்டு அதில் ஏசி போட்டபடி அதில் சாரதி இருந்து கொண்டிருந்துள்ளார். இவ்வாறு இரவு வேளைகளில் அரச வாகனங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது

எனவே இவை அனைத்தையும் அரச உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தி அரச பணம் வீணடிக்கப்படுவதை தடுத்து உண்மையோடும் நேர்மையோடும் கடமையை பொறுப்பேற்கும் போது எடுத்த சத்திய பிரமானத்தின் உண்மைக்கு ஏற்ற நீதிக்கு ஏற்ப நீங்கள் செயற்பட்டு மக்களின் வரிப்பணம் மக்கள் மீது சுமத்தபடுவதை தடுக்க  ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும் துணையாக நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். என்றார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்