நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!

Date:

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி இருந்தார்.

நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ரி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. ரி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த சூழலில் 3வது போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ரொஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ், 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்தார். மலான், 96 ரன்கள் எடுத்தார்.

369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்கள் ரன்கள் எடுத்தது அந்த அணி. கிளென் பிலிப்ஸ் மட்டுமே அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார்.

வோக்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்