பல்லேகல மைதானத்தில் முதல் முறை… 7 ஆண்டுகளின் பின் இலங்கையின் இரட்டை சதம்: கருணாரத்னவின் காவிய இன்னிங்ஸ்!

Date:

திமுத் கருணாரத்னவின் கன்னி இரட்டை சதம் மற்றும் தனஞ்சய டி சில்வாவின் 154 ஓட்டங்களுடன் பங்களாதேஷின் பிரமாண்ட ஓட்ட எண்ணிக்கைக்கு மிக நெருக்கமாக இலங்கையும் அண்மித்துள்ளது.

இன்றைய  4ஆம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை குவித்துள்ளது. பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 541 ஓட்டங்களை குவித்தது.

இன்று .53 நிமிடங்கள் முன்னதாக ஆட்டம் முடிந்தது. இன்று 76 ஓவர்களே வீசப்பட்டது. போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது.

நேற்றய ஸ்கோரான 229/3 என்ற நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கிய இலங்கை, மேலதிக விக்கெட் இழப்பின்றி, 512 ஓட்டங்களை குவித்துள்ளது.

தனஞ்ஜெய டி சில்வா 278 பந்துகளில், 20 பௌண்டரிகளுடன் 154 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இன்றைய ஹீரோ திமுத் கருணாரத்ன. இலங்கை அணியில் கிரிக்கெட் ஆடுபவர்கள் கற்றுக்கொள்ள ஒரு காவிய இன்னிங்ஸையே ஆடி முடித்துள்ளார். அது நாளையும் தொடரும். முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் இதுவரை 11 மணித்தியாலங்களும், 3 நிமிடங்களும் களத்தில் நின்றுள்ளார். 419 பந்துகளை சந்தித்து, 25 பௌண்டரிகளுடன் 234 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கருணாரத்னவின் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். 2017ஆம் ஆண்டு டுபாயில் பாகிஸ்தானிற்கு எதிராக அவர் பெற்ற 196 ஓட்டங்களே இதுவரை அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

கண்டி, பல்லேகல்லை மைதானத்தில் அடிக்கப்பட்ட முதலாவது இரட்டை சதம் இதுவாகும். அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் கத்துக்குட்டி அணியாக மாறி விட்ட இலங்கை சார்பில், கடந்த 7 ஆண்டுகளில் எந்த வீரரும் இரட்டைச்சதம் அடித்ததில்லை. இலங்கை அணிக்கு புது இரத்தம் பாய்ச்சும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கருணாரட்ணவின் இரட்டை சதம், அணிக்கு புத்துணர்ச்சி அளிக்குமென்பது நிச்சயம்.

இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை 24 மணித்த்தியாலங்கள் கருணாரத்ன களத்தில் நின்று விட்டார். முன்னதாக, முதல் 3 நாளும் பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் 13 மணித்தியாலங்கள் களத்தடுப்பில் ஈடுபட்டார். துடுப்பாட்டத்தில் 11 மணித்தியாலங்கள் களத்தில் நின்றதன் மூலம், 24 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் இந்த டெஸ்டில் களத்தில் நின்றுள்ளார்.

தஸ்கின் அஹமட்டின் பந்தை பௌண்டரிக்கு அடித்து, இரட்டை சதத்தை எட்டினார்.

இன்றைய ஆட்டத்தில் திமுத், மிகுந்த செட் ஆகி ஆடினார். அவரது 25 பௌண்டரிகளில் 12 ஐ ஓன்-சைட் மூலம் பெற்றார். விக்கெட்டுகளுக்கு இடையில் சிரமமின்றி ஓடினார், ஈரப்பதமான நிலையில் ஏராளமான இரண்டு, மூன்று ஓட்டங்களை எடுத்தார்.

நான்காவது நாள் முடிவில், கருணாரத்ன மற்றும் டி சில்வா 322 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

4வது விக்கெட்டிற்கு இலங்கையில் பெறப்பட்டஅதிகபட்ச ஓட்டம் இதுவாகும். முன்னதாக, 2011 இல் மைக்கல் ஹஸ்ஸி மற்றும் ஷோன் மார்ஷ் ஆகியோர் பெற்ற 258  ஓட்டங்களே இதுவரை சாதனையாக இருந்தது.

கருணாரத்ன, ஓஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்துகளை இரக்கமில்லாமல் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

இருவரும், இணைந்த முதலாவது 31 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்தனர், இதன் போது கருணாரத்ன 247 பந்துகளில் 100 ரன்கள் எட்டினார். அவர் தொண்ணூறு ஓட்டங்களிற்கு வந்ததும் சிறிது நேரம் தாமதித்து- 30 பந்துகளை செலவிட்டு- சதத்தை பெற்றார். ஆனால், சதத்தை பெற்றதும், மீண்டும் செட் ஆகி இயல்பாக ஆடத் தொடங்கினார்.

கருணாரத்ன கட்டமைத்த வலுவான இன்னிங்ஸ், தனஞ்ஜெயவை சுதந்திரமாக ஆடும் சூழலை உருவாக்கியது. அவர் பல தருணங்களில் தாக்குதல் பாணி ஆட்டத்திற்கு மாறவும் சூழல் அனுமதித்தது.

கருணாரத்ன 166 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தைஜுல் இஸ்லாமின் பந்துவீச்சில் கடினமாக பிடியெடுக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், லிட்டன் தாஸால் அதை செய்ய முடியவில்லை. மற்றும்படி, இந்த ஜோடி எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.

பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் இன்று சோர்ந்து விட்டனர். நாள் முழுவதும் வீசியும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியாதது அவர்களை மனதளவில் மிக சோர்வடைய வைத்திருக்கும். கப்டன் மோமினுல் ஹக் பெரும்பாலும் தனது சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியிருந்தார், மூன்றாம் நாளில் அவர்கள் உருவாக்கிய வாய்ப்புகளை பிரதிபலிக்க முடியவில்லை.

நாளை ஆட்டத்தின் இறுதிநாள்.

வெற்றி தோல்வியின்றி ஆட்டம் முடிவுமென எதிர்பார்க்கலாம்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்