வடமாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 386 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 11 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
இதில் 8 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 7 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 இராணுவத்தினரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




