நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட தியாக தீபம் திலிபனின் சிலை இன்று பொலிஸாரால் யாழ்.நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டது.

Date:

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

 

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க மறுத்திருந்தது. குறிப்பக சிலை வழக்கில் எந்த ஒரு சந்தேக நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டததை அடுத்தே சிலையை பொறுப்பேற்க நீதிமன்றம் மறுத்திருந்தது. மேலும் சிலை தொடர்பான வழக்கை ஜனவரி மாதத்திற்க்கும் நீதிமன்றம் ஒத்துவைத்தது.

இந்நிலையில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் இருந்து வெள்ளைத் துணியால் மூடிக்கட்டப்பட நிலையில், பொலிஸ் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...

மூளைச்சாவு அடைந்த இளைஞனின் இதயம் வெற்றிகரமாக மாற்றப்பட்டது

விபத்தொன்றைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்