காதலியுன் பேசிக்கொண்டிருந்த தயாசிறி எம்.பியின் மகனிடம் கத்திமுனையில் கொள்ளை!

Date:

பம்பலப்பிட்டி லேயார்ட்ஸ் வீதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு காதலியுடன் பேசிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகன் கவின் ஜயசேகரவை கத்தியை காட்டி மிரட்டி வெள்ளை தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கட்கிழமை (3) இந்த சம்பவம் நடந்தது.

ரூ.163,000 பெறுமதியான தங்கச்சங்கிலியும், வாகனத்துக்குள்ளிருந்த ரூ.3,000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையனை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜயசேகர தனது காதலியுடன் காரில் பேசிக் கொண்டிருந்த போது, நபர் ஒருவர் காருக்கு அருகில் வந்து பணம் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடுக்க பணம் இல்லை என்று கூறியபோது, அந்த நபர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீட்டி, முதலில் கார் டாஷ்போர்டில் இருந்த ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு பையை பறிக்க முயன்றுள்ளார்.

சந்தேக நபர் பைக்குள் இருந்த வெள்ளைத் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொள்ளையன் போதைக்கு அடிமையாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்