மசாஜ் நிலையத்தில் யுவதியுடன் உல்லாசமாக இருந்த வர்த்தகருக்கு ஏற்பட்ட அவதி!

Date:

மசாஜ் நிலையமென்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிக்கு சென்ற வர்த்தகரிடம், நூதனமான முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

நெதிமலையில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளிக்கும் இருவர் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை, மசாஜ் நிலையமொன்றுக்கு சென்றதை தந்தை மற்றும் மனைவியிடம் கூறுவதாக கூறி அவரை மிரட்டி, 100,000 ரூபா பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் திங்கட்கிழமை (3) முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு வந்திருந்த இனந்தெரியாத இரு நபர்கள் அவரைச் சந்தித்து, அவர் மசாஜ் மையத்தில் தொடர்புகொண்டிருந்த பெண் பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவருக்கு பாலியல் நோய் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், அறிக்கைகள் கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் இந்த இரண்டு நபர்களும் அந்த தொழிலதிபரிடம் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டுமானால், ரூ.100,000 கொடுக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்ததாக வர்த்தகர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்