**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை 6ஆம் தேதிக்கு இன்று ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோஹந்த அபேசூரிய (தலைவர்) மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, தனது வாய்மொழி சமர்ப்பிப்புகளை தொடர்ந்து முன்வைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்