உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

Date:

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர் செல்​போனில் டேட்​டிங் செயலி மூலம் பல ஆண்​களிட​மிருந்து பணத்​தைப் பறித்து விட்​ட​தாகக் கூறி வழக்​கறிஞர் ஒரு​வர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தின் வழக்கு தொடுத்​தார்.

சமூக வலை​தளங்​கள் மற்​றும் டேட்​டிங் செயலி மூலம் நட்பு ஏற்​படுத்​திக் கொண்டு ஆண் நண்​பர்​களுக்கு தனது அந்​தரங்​க​மான புகைப்​படங்​களை​யும், வீடியோக்​களை​யும் பல்​லவி சிங் அனுப்​பு​வார். பின்​னர் நேரில் சந்​தித்து அந்த ஆண் நண்​பருடன் அந்​தரங்​க​மான முறை​யில் படங்​களை எடுப்​பார். பின்​னர் அந்த புகைப்​படங்​களை வைத்து அவர் பிளாக்​மெ​யில் செய்து பணம் பறிப்​பார் என்று வழக்​கறிஞர் தனது வழக்​கில் புகார் கூறி​யிருந்​தார்.

பல ஆண் நண்​பர்​களிடம் பழகி அவர் இது​வரை ரூ.6 கோடிக்​கும் மேல் சுருட்​டி​யுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், உடனடி​யாக அந்​தப் பெண் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​து​மாறு போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது.

போலீஸ் நடத்​திய விசா​ரணை​யில் பல்​லவி சிங், பொய்​யான புகார்​களைக் கொடுத்து 5 பேரை சிறை​யில் தள்​ளி​யிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. தலைமறை​வாக உள்ள பல்​லவி சிங் ராஜ்புத், அவரது 2 பெண் உதவி​யாளர்​கள், ஒரு ஆண் உதவி​யாளர் ஆகியோரை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

spot_imgspot_img

More like this
Related

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்