பெரியகல்லாறு பொதுச் சந்தை கவனிப்பாரற்று பலவருடங்களாக இயங்க முடியாத நிலையில் காணப்படுவதால் வியாபாரிகளும் பொது மக்களும் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கெடுத்து வருகின்றனர்.

Date:

குறித்த பொதுச் சந்தையானது பல வருடங்களாக இயங்காததால் கட்டடங்கள் அனைத்தும் அழுக்கடைத்து துருநாற்றம் வீசுவதுடன் புறாக்களின் குடியிருப்பாகவும், குப்பைகள் நிறைந்த இடமாகவும் மாறியுள்ளதாகவும்
குறித்த விடயத்தை  அதிகாரிகளிடம்  பல முறை சுட்டிக்காட்டியும்    அதிகாரிகள்  கவனம் செலுத்தாது பலகாலமாக அசமந்த போக்கை கடைப்பிடித்து வருவதாகவும்   . இந் நிலையால் பெரிய கல்லாறு பொதுச் சந்தையானது தற்காலிகமாக பிறிதொரு இடமான  வீதியோரத்தில் பல காலமாக இயங்கி வருவதாவதும் அவர்கள் தெரிவித்தனர்.
 இவ்வாறு தற்காலிகமாக இயங்கிவரும் பொதுச் சந்தையை
 பிரதேச சபை குத்தகைக்கு வழங்கியதன்   அடிப்படையில்  இச் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பணமும் அறவீடு செய்யப்படுகின்றது. சகல வசதிகள் கொண்ட பொதுச் சந்தை  பாழடைந்து கிடக்க  வசதியற்ற சந்தையில் வியாபாரம் செய்யும் எங்களிடம் பணம் அறவீடு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை வியாபரிகள் எழுப்புகின்றனர்.
   இதனை கருத்திற் கொண்டு
 குறித்த விடயம் தொடர்பாக பெரியகல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர் கணேசநாதன் அவர்களிடம் வினவிய போது.
 அவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
குறித்த பொதுச் சந்தையானது இயங்க முடியாமைக்கான காரணம் சந்தைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்ட கட்டடமேயாகும். ஆனால் இக் கட்டிடத்தை உடைப்பதற்கான அனுமதியானது ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், மற்றும் சபையிடமிருந்தும் கிடைக்கப் பெற்று
 இதற்கான நிதியும்  ஒதுக்கப்பட்டு பல காலம் கடந்த நிலையில்  இன்னும்  அக் கட்டடமானது அகற்றப்படவில்லை இதற்கான காரணத்தை  பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் தவிசாளரிடம்  வினாவுகின்ற போது அவரிடமிருந்து ஒழுங்கான பதில் இதுவரை  எனக்கு கிடைக்கவில்லை  எனவே  பொதுச் சந்தைக்கு முன்னால் இருக்கின்ற அக் கட்டடமானது உடைக்காவிட்டால்  குறித்த பொதுச்சந்தையானது இயங்க முடியாத துப்பாக்கிய சூழ்நிலை தொடருமென    பிரதேச சபை உறுப்பினர்  இதன் போது தெரிவித்தார்.
spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்