Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Date:

அரசாங்கத்தின் “Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரஜா சக்தி தவிசாளர் எம்.ஐ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் எம்.ஐ.எஸ். பர்வீன், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.கே. சானாஸ், சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன்போது அக்பர் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டு, சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமானதாக மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமூகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய சிரமதான நடவடிக்கைகள் டெங்கு நோய் பரவலைத் தடுப்பதோடு மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் தூய்மையையும் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்