முத்துராஜாவின் பராமரிப்பு செலவை தாய்லாந்திடம் கேட்கப் போகிறேன்!

Date:

தாய்லாந்து மன்னர் தலதா மாளிகைக்கு வழங்கிய யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், யானையின் பராமரிப்பு செலவுக்காக வழக்கு தொடரப்போவதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பரிசாக வழங்கியதை திருப்பிக் கேட்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து முத்துராஜா யானை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை யானை ஆரோக்கியமாக உள்ள போதிலும், யானை குறித்த தவறான தகவல் தாய்லாந்திற்கு நாடா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானைக் குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்குமாறு கோரப்பட்டதாகவும், அதன்படி 1986ஆம் ஆண்டு அரசர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா யானையை தலதா மாளிகைக்கு பரிசளித்ததாகவும் முன்னாள் தியவடன நிலமே  கூறுகிறார்.

யானை துன்புறுத்தப்பவில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனம் தவறான தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்