28.8 C
Jaffna
February 18, 2025
Pagetamil
இந்தியா

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிவுட் நடிகைக்கு ஜெட் பரிசளித்த குற்றவாளி

east tamil

டெல்லியில் நிலநடுக்கம்

east tamil

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

Pagetamil

காதலர் தின இரவில் தகாத உறவு : காதலன் கணவனால் கொலை

east tamil

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!