வெளிநாட்டு பெண்ணை காதலித்த நபர் தற்கொலை

Date:

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல்சேனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த இந்த இளைஞர், புலம்பெயர் தமிழ்ப் பெண்ணொருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

காலை வேளை உயிரிழந்த இளைஞனின் தாய் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிலையில் இவ்வாறு தூக்கில் தொங்கி காணப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (16) காலை, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், காதல் விவகாரமே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் உடல் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் அவர்களின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். மூச்சுக் குழாய் இறுகி ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்