அம்பாறையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகில் இன்று (17) நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த குறித்த இயந்திரம் தற்செயலாக நிலை தடுமாறி தரையிலே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினால் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
எனினும், குறித்த விபத்தின் போது, எந்த உயிராபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.




