குருணாகலின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

குருணாகல்‌ மாவட்டத்தின்‌ கனேவத்த பிரதேச செயலகப்‌ பிரிவிலுள்ள‌ கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர்‌ பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்‌ 19 பரவலை தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌ தளபதி ஜெனரல்‌ ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்‌.

குறித்த பகுதியில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் அடுத்த மூன்று வாரங்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் காரணமாக, இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த ஏராளமான நபர்கள் சமீபத்திய நாட்களில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் கண்டறியப்பட்டதால், இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்