அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு

Date:

அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், யாழ்ப்பாணத்தில் இன்று (03) விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதம அஞ்சலக வளாகத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த விசேட வியாபார மேம்படுத்தல் பவனி, யாழ்ப்பாணம் நகரின் முக்கிய பகுதிகளினூடாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கு. செந்தில்குமார், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சலக உதவி அஞ்சல் அத்தியட்சகர் திருமதி சாந்தகுமாரி பிரபாகரன் உள்ளிட்ட யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு, இலங்கை முழுவதும் சுமார் 30 அஞ்சல் நிலையங்களில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்