600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 33 வருட ஞாபகார்த்த நிகழ்வு

Date:

சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு ஒன்று இன்று (11) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக நினைவு தூபியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 1990 ஆம் ஆண்டு சரணடைந்த பின்னர் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இதன் போது முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறியினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள், சகல சிங்கள முஸ்லிம் பொலிசார்களையும் சரணடைய உத்தரவி்டனர். ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ்குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் அப்போதைய கிழக்கு தளபதி கருணாவின் உத்தரவினால் நடத்தப்பட்டதாக உயிர்தப்பிய பொலிசார் குற்றம்சாட்டுகிறார்கள். -பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

மெக்சிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது – நாடு முழுவதும் வன்முறை; 11 பேர் பலி!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து...

மாத்தளை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த சந்தேகநபர் – அதிகளவு ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதே காரணம்!

மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது திடீரென...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் காயம், 21 பேர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர் குழுக்களுக்கு இடையே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்