போதையில் பேருந்து செலுத்திய இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Date:

போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு பேருந்துகளை செலுத்திய இரண்டு தனியார் பேருன்து சாரதிகளுக்கு கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று (06) 81,000 ரூபா தண்டப்பணமும் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மாநகர போக்குவரத்து பொலிசார் இந்த இரு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்ததுடன், போதைப்பொருட்களை பாவித்துவிட்டு பேருந்துகளை செலுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

இலக்கம் NE 7852 என்ற தனியார் பேரூந்தின் சாரதி  வதுரகமவைச் சேர்ந்த சந்துன் சம்பத் மற்றும் இலக்கம் NE 1821 என்ற தனியார் பேருந்தின் சாரதியான மினுவாங்கொடை,யை சேர்ந்த நிஷாந்த பிரதீப் மல்லவாராச்சி ஆகியோருக்கே தண்டனை விதிக்கப்பட்டது.

சாரதிகள் இருவரையும் கைது செய்த பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியதாகவும் அறிக்கையின் படி அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவரும் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட போதே, இந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்