அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் புதுமுக வீரர்களான நிஷான் மதுஷ்க மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டிக்காக திமுத் கருணாரத்ன தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இலங்கை அணி இம்மாதம் 27ஆம் திகதி நியூசிலாந்துக்கு செல்லவுள்ளன.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் 23 வயதான நிஷான் மதுஷ்க மொரட்டுவ உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர். வலது கை வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்நாயக்க வாரியபொல ஸ்ரீ சுமங்கல உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் ஆவார்.
இலங்கை டெஸ்ட் அணி:
திமுத் கருணாரத்ன (கப்டன்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, நிஷான் மதுஷ்க, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, சாமிக கருணாரத்ன, கசுன் குமார் ராஜித, விஷ்வபெர்னாண்டோ மற்றும் மிலன் ரத்நாயக்க




