முல்லைத்தீவில் 14 வயது சிறுமி போதைக்கு அடிமையாக்கப்பட்டு 3 வருடம் வல்லுறவு: போதைக்கு பணம் வாங்கிக்கொண்டு நண்பர்களை காமவெறியாட அனுமதித்த அண்ணன்!

Date:

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில் மெல்ல கற்கும் சிறுமியொருவர் 3 ஆண்டுகளாக போதைப் பொருள்டிகொடுக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் சகோதரனது நண்பர்களே சிறுமியை 3 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான 19 வயது சகோதரன் பணம் பெற்றுக்கொண்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளதும், அந்த பணத்தை ஹெரோயின் போதைப்பொருள் வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மெல்ல கற்கும் சிறுமியான மாணவியான இந்த சிறுமியை கடந்த மூன்று மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை. அதனை அடுத்து சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்கு சென்று ஆராய்ந்துள்ளனர். அவர்களுக்கு எழுந்த சட்டத்தின் அடிப்படையில் சிறுமியை சட்ட மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதும், ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதும் கண்டறியப்பட்டது.

சிறுமியின் தந்தையும் கசிப்புக்கு அடிமையானவர். தாய் வீதி வேலைக்கு செல்பவர். அதனால் பெரும்பாலான நேரங்களில் சிறுமி வீட்டில் தனித்திருந்ததை, சாதகமாக பயன்படுத்திய சிறுமி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் சகோதரன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள நிலையில் அதை பயன்படுத்திக் கொண்ட நண்பர்கள் சகோதரனுக்கு ஆயிரம் ரூபாவை கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

சிறுமிக்கு ஐஸ்போதைப்பொருளை கொடுத்து அடிமையாக்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்