பட்டப்பகலில் சக கைதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மரணதண்டனை கைதி!

Date:

வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று (24) பட்டப்பகலில் மற்றுமொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டில் உள்ள கழிவறையில் இந்த சம்பவம் நடந்தது.

ஊழல் செய்த குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  கைதியை கொலைச் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

29 வயது கைதி இயற்கை கடன் கழிக்க கழிவறைக்கு சென்ற போது, ​​52 வயது கைதி பலவந்தமாக கழிவறைக்குள் நுழைந்து 29 வயது கைதியின் வாயை பொத்தியதாக போலீசார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை பொலிஸார், துஷ்பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 45 வயது கைதி ஒருவரின் வாக்குமூலங்களையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்