அர்ஜென்டினாவின் சான்டா ஃபே மாகாணத்தில் உள்ள ஆட்பதிவு அலுவலகத்தினர் விபரீதமாக சிக்கல் ஒன்றை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். அங்கு புதிதாக பிறந்த குழந்தைகளிற்கு பெயர்சூட்ட வருபவர்கள், இரண்டு பெயர்களையே அதிகமாக வைக்கிறார்கள்.
ஆண் குழந்தையொன்றால் – லியோனல். பெண் குழந்தையென்றால்- லியோனோலா!
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வருபவர்கள் அனைவரும் இந்த இரண்டு பெயர்களையே சொல்கிறார்கள் என ஆட்பதிவு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீதான அபிமானமே இந்த சிக்கலிற்கு காரணம்.
சாண்டா ஃபே மாகாணத்திலேயே மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவும் உள்ளது.




