‘நான் நலமுடன் இருக்கிறேன்’: வதந்திகளுக்கு நடிகர் விமல் முற்றுப்புள்ளி

Date:

நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமல். தொடர்ந்து ‘கிரீடம்’, ‘குருவி’, ‘பந்தயம்’, ‘காஞ்சிவரம்’ உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். இதன் பின் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’,’தேசிங்கு ராஜா’,’ஜன்னல் ஓரம்’, ‘புலிவால்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் விமர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ இணைய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனையறிந்த விமலின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நலமுடன் படப்பிடிப்பிலிருந்து’’ என பதிவிட்டு படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்