ரூ.10,000 கட்டணத்திற்கு அழைத்து வரப்பட்ட 22 வயது யுவதி கைது!

Date:

இளம் யுவதிகளை வைத்து அதிக கட்டணம் அறவிடும் விபச்சார விடுதியை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட இந்த சோதனையில், விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 22 வயதுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வத்து மகா விகாரைக்கும் முன்னணி பெண்கள் பாடசாலைக்கும் இடையில் அமைந்துள்ள இந்த விபச்சார விடுதி, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதி என்ற போர்வையில் இயங்கி வந்தது.

இந்த விடுதிக்கு செல்லும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா ரூ.15,000 வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில், குறித்த ஹோட்டல் மற்றும் விபச்சார விடுதி பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.

5,000 ரூபாய் கொடுத்து ஒரு அறையை முன்பதிவு செய்த பின்னர், வாடிக்கையாளர்களுக்கு பெண்களை வழங்க ஹோட்டலின் மேலாளர் ஏற்பாடு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முன்பதிவு செய்த விடுதியில் உள்ள யுவதிகளின் புகைப்படங்களை மேலாளர் காண்பிப்பார். வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப, பெண்கள் ஒழுங்கு செய்யப்படுவர். மிக இளம் யுவதிகள் அதிக கட்டணத்தில் விற்கப்பட்டுள்ளனர்.

மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரிற்கு வழங்குவதற்காக இந்த யுவதி அழைத்து வரப்பட்ட போது, கைதானார். இந்த யுவதிக்கு மேலாளர் ரூ.10,000 விலை நிர்ணயம் செய்திருந்தார்.

இந்த யுவதி, கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் விஞ்ஞான பாடத்தில் உயர்தரத்தை பூர்த்தி செய்த 22 வயதுடையவர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்