கைக்குண்டை காட்டி கொலை மிரட்டல் விடுத்து 60+ வயதில் 3 பேரை வல்லுறவிற்குள்ளாக்கிய 36 வயது நபர் கைது!

Date:

கைக்குண்டை காட்டி மிரட்டல் விடுத்து, 62 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய 36 வயதான நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிற்கு எதிராக ஏற்கெனவே இரண்டு பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளிலும் 60, 62 வயதான பெண்களையே மிரட்டி வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.

கம்பஹா தம்மித பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண்ணொருவருக்கே கைக்குண்டை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்து  கொடூரமான முறையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கந்தளாய் பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். கஞ்சாவிற்கு அதிக அடிமையான இந்த நபர், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாவார்.

60 மற்றும் 62 வயதுடைய இரு பெண்களை பலாத்காரம் செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக கந்தளாய் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்