28.4 C
Jaffna
March 1, 2025
Pagetamil
குற்றம்

யுவதி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிடப்பட்டார்: முன்னாள் காதலன் கொடூரம்!

இளம் யுவதியொருவரை வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஓடும் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்ட முன்னாள் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஓடும் வாகனத்திலிருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட யுவதி, வீதியில் விழுந்து சுயநினைவின்றி கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காலி, படபொல பொலிஸ் பிரிவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த யுவதி இன்னும் சுயநினைவின்றி மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடிபட்டதாலோ அல்லது வேறு நிலையினாலோ மூளை வீக்கமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள யுவதியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படபொல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யுவதி சில காலத்திற்கு முன்னர் ஆண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபரின் சீர்கேடான நடத்தைகளால், அவரை விட்டு யுவதி பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், யுவதியை பழிவாங்க இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) இரவு 7:00 மணியளவில் படபொல தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வைத்து யுவதியை வாகனத்தில் இழுத்து ஏற்றிச் சென்றுள்ளார்.

தகவலறிந்த யுவதியின் சகோதரன் வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளார்.

இதற்குள், ஓடும் வாகனத்திற்குள் யுவதி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். யுவதியின் சகோதரன் வாகனத்தை விரட்டுவதையறிந்ததும், ஓடும் வாகனத்திலிருந்து யுவதியை தள்ளிவிழுத்தி விட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

எனினும், யுவதியின் சகோதரன் உள்ளிட்ட குழுவினர் வாகனத்தை மடக்கி, முன்னாள் காதலனை நையப்புடைத்தனர். பின்னர், அவரை படபொல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யுவதியின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

படபொல பொலிஸார் சந்தேகநபரை முற்படுத்தி, பி அறிக்கை தாக்கல் செய்தயதையடுத்து அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!